எஸ்சிஓ மாநாட்டில் தலைமை நீதிபதி பேச்சு ஆதிக்க சக்திகளை எதிர்த்து நீதித்துறை போராட வேண்டும்

சோச்சி: ‘‘நீதித்துறையின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும்’’ என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் (எஸ்சிஓ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பேசி உள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் எஸ்சிஓ அமைப்பின் தலைமை நீதிபதிகள் மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பங்கேற்று பேசியதாவது:அரசியலமைப்பை பாதுகாத்து நீதியை நிலைநாட்ட நீதித்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். தற்போது உலகம் முழுவதும் அதிகாரம் படைத்த ஆதிக்க சக்திகள் எழுச்சி அடைந்து வருகின்றன.

நீதிபதிகளை காட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதிக அதிகாரம் பெறுகின்றனர். இதனால், சில இடங்களில் ஆதிக்க சக்திகளிடம் நீதித்துறை சரணடைவதில் ஆச்சர்யம் இல்லை. எனவே ஆதிக்க சக்திகளின் சவால்களை சமாளித்து நீதித்துறையை நாம்தான் சுயமாக வலுப்படுத்த வேண்டும். நீதித்துறையின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து நாம் போராட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: