டீசல் விலை உயர்வால் வாடகை ஆட்டோ, கார் உரிமையாளர்கள் தொழிலை விட முடிவு

தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நிலவரப்படி 2 லட்சத்து 51 ஆயிரத்து 56 ஆட் டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதபோல் பள்ளி, கல்லுாரி, பல் கலைக் கழகங்கள் என கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் 36 ஆயிரத்து 580 பேருந்துகள் இயக் கப்படுகிறது.  தமிழகத்தில் மட்டும் இயக்கப்படும் லாரிகள் 2 லட்சத்து 55 ஆயிரத்து 706 லாரி களும், தேசிய அளவில் அனுமதி பெற்றுள்ள( நேசனல் பர்மிட்) 88 ஆயிரத்து 977 லாரிகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வாடகைக்கு இயக்கப்படும் கேப்கள் 84 ஆயிரத்து 846 வாகனங்கள் இயக்கப்படுகிறது. மேலும் தனியார் ஆம்னி பேருந்துகள் 936 வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இந்த வாக னங்களுக்கு அவர்கள் செல்லும் துாரத்திற்கு ஏற்றவாறு தினசரி டீசல் பயன் படுத்தி வந்தனர். இந்த டீசல் விலை உயர்வால் வாடகைக்கு வாகனங்கள் இயக்குபவர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவதித்து வருகின்றனர்.  குறிப்பாக ஆட்டோ ஓட்டுபவர்கள் கடும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். ஜூன் மாதம் பள்ளி தொடங்கிய போது பள்ளி குழந்தைகளை தினசரி பள்ளியில் விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு வாடகை நிர்ணயம் செய்து கொள் வார்கள். இந்த கட்டனதை ஆட்டோ ஓட்டுனர்கள் மாதம் மாதம் குழந்தைகளின் பெற்றோர்களிடம் வாங்கி கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் பள்ளிகள் தொடங்கிய போது, அப்போ தைய பெட்ரோல் விலை 67.38. வீட்டில் இருந்து பள்ளிக்கு போக நான்கு கிலோ மீட்டர். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வர நான்கு கிலோமீட்டர் என மொத்தம் 8 கிலோமீட்டர் துாரம் உள்ள பள்ளிக்கு ஒரு குழந்தைக்கு ரூ.900 கட்டமாக நிர்னயம் செய்து வாங்கி வந்தனர். இந்த கட்டன விபரம் மாவட்டத்திற்கு மாவட்டம் சிறிய மாற்றம் ஏற்படும். தற்போது டீசல் விலை ரூ. 73.91 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் தமிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா பொருட்களை அதிக அளவில் இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்று நிர்ப்ப ந்தம் செய்வதால் இந்திய அரசு பெரும் சிக்கல்களை சந்திக்க உள்ளது.

வரும் நாட்களில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்து விரைவில் டீசல் விலை ரூ.90முதல் ரூ.100க்கு விற்பனை நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் வாடாகைக்கு ஆட்டோ ஓட்டுபர்கள் செய்வது அறியாது உள்ளனர். நிலமையை பெற்றோர்களிடம் தெரிவிக்கும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை எனில் இந்த தொழிலை விட்டு மாற்று பணிக்கு செல்லாமா என்று யோசனையில் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் டீசல் விலை உயர்வதால் வாடகை கார்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு வாடகை நிர்ணம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் கண்டிப்பாக வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தை தேடுவார்கள். இதனால் வாடிக்கை யாளர்களை இழக்காத வகையில் வாகனங்களை இயக்கினால் தொடர்ந்து டீசல் விலை உயர்வால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பாதித்தது போதும் என்று நினைத்து மாற்று தொழிலை நாட முடிவு செய்து ள்ளனர். இதனால் இந்த துறையில் லட்சகணக்கில் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டீசல் வாகனங்கள் இயக்குபவர்கள் கூறியதாவது: டீசல் விலை தினசரி விலை உயர்ந்து வருவதால் நாங்கள் திக்குமுக்காடி போய்யுள்ளோம். ஆட்டோ ஓட்டுபவர்கள் தினசரி ஒரு வாடகை வைத்து இயக்க முடியாது. குறிப்பாக பள்ளி குழந்தைகள் மாத வாடகைக்குதான் இயக்குகிறோம். அதனை நாங்கள் தினசரி மாற்றிக்கொள்ள முடியாது. இதேபோல் வெளியூர்களுக்கு செல்லும் வாகனம் புறப்படும் போது அன்றைய டீசல் விலைக்கு ஏற்றார்போல் கட்டனம் பேசி வாடிக்கையாளர்களை அழைத்து செல் வோம். ஆனால் நான்கு ஐயந்து நாட்களுக்கு பிறகு ரூ,2 வரை விலை உயர்ந்து விடுகிறது.

அப்போது டீசல் விலை உயர்ந்துவிட்டது இதனால் வாடகை அதிகம் தரவேண்டும் என்று கேட்க முடியாது. இப்படி தினசரி பல்வேறு பிரச்னைகளை சந்தித்து லாபத்தில் எங்களால் இயக்க முடியவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் டீசல் விலை குறைவு நப்பதாக தெரியவில்லை. மறாக அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் தொடர்ந்து இந்த தொழிலில் ஈடுபட்டால் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தொழிலைவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

வரும் நாட்களில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்து விரைவில் டீசல் விலை ரூ.90முதல் ரூ.100க்கு விற்பனை நடை பெறும் என்பதில் சந்தேகமில்லை. வாடா கைக்கு ஆட்டோ ஓட்டுபர்கள் செய்வது அறியாது உள்ளனர். நிலமையை பெற்றோர்களிடம் தெரிவிக்கும் போது அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை எனில் இந்த தொழிலை விட்டு மாற்று பணிக்கு செல்லாமா என்று யோசனையில் உள்ளனர்.

Related Stories: