புதிய இன்ஜினுடன் ஹோண்டா ஆக்டிவா 125

அடுத்த ஆண்டு ஏப்ரலில் வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான இன்ஜின்களுடன் வாகனங்களை அறிமுகம் செய்வதில், மோட்டார் வாகன நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா  இருசக்கர வாகன நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான முதல் மாடலாக ஆக்டிவா 125 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இப்புதிய மாடலில் சாதாரண ஸ்டார்ட்டர் மோட்டாருக்கு பதிலாக ஏசிஜி ஜெனரேட்டர் மூலமாக  ஸ்டார்ட் செய்யும் வசதியை ஹோண்டா கொடுத்துள்ளது. இதனால், சப்தம் இல்லாமல் இன்ஜின் ஸ்டார்ட் செய்யும் சிறப்பம்சத்தையும், ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. புதிய ஹோண்டா ஆக்டிவா 125  ஸ்கூட்டரில் இருக்கும் இன்ஜின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மாசு உமிழ்வு குறைந்திருப்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும்  இந்த ஸ்கூட்டர் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் புதிய டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்நேர எரிபொருள் சிக்கனம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் போன்ற தகவல்களை  பெற முடியும்.

புதிய மட்கார்டு அமைப்பு, நேர்த்தியான பாடி லைன், எல்இடி விளக்கு, டியூப்லெஸ் டயர் போன்றவை இதன் இதர முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. முழுமையான உலோக பாடி, காம்பி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 3 ஸ்டெப் அட்ஜெஸ்ட்  வசதியுடன்கூடிய சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. கருப்பு, சிவப்பு, வெள்ளை, நீலம், சாம்பல் மற்றும் பழுப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. பிஎஸ்-6 இன்ஜின் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப சிறப்புகளுடன் ஹோண்டா ஆக்டிவா  125 ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, டெலிவிரியும் துவங்கப்படும். தற்போதைய மாடலைவிட விலை 10 முதல் 15 சதவீதம் விலை அதிகமாக இருக்கும் என ஹோண்டா  அறிவித்துள்ளது.

Related Stories:

>