தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடல் ஊழலில் நீந்தும் உள்ளாட்சி துறை அமைச்சரிடம் பதில் இல்லை: மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. இந்த நிலையில் ஐடி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சி துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நான் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று கட்சியினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வருவது ஆறுதலாக இருந்தாலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்றிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறேன்.தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்படுகிறது. அதுமட்டுமல்ல ஐடி கம்பெனிகள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ள அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்? இதற்கெல்லாம் “ஊழலில்” நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் உரிய பதில் இல்லை தாகத்தில் தமிழகம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertising
Advertising

2ம் நிலை காவலர் பணி திருநங்கைகளுக்கு வயது வரம்பை உயர்த்தக்கோரி வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 16: இரண்டாம் நிலை காவலர் பணிக்கு திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான 2 ஆயிரத்து 465 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில் வயது வரம்பை பொறுத்தவரை பொது பிரிவினருக்கு 24 வயது, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் ஆகியோருக்கு 26 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 29 வயது, விதவைகளுக்கு 35 வயது, முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருநங்கைகள் சீர்மரபினர் பிரிவில் வருவதால் 26 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இதையடுத்து, திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45 ஆக உயர்த்தி புதிய அறிவிப்பாணை வெளியிடக்கோரி சென்னை அமைந்தகரையை சேர்ந்த திருநங்கை தீபிகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் விளக்கத்தை பெற்று தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: