டெல்லியில் 19 வயது இளைஞர் கத்தரிக்கோலால் குத்தி கொலை.... 48 மணி நேரத்தில் 6-வது கொலை

டெல்லி : டெல்லியில் 48 மணி நேரத்தில் 6 கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் (டிஎஸ்பி) ஷாத்ரா, மேகனா யாதவ் கூறியதாவது;  கொலைசெய்யப்பட்ட வாலிபர் 19 வயது ஆசாப் என அடையாளம் காணப்பட்டது. அவர் அருகில் உள்ள ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இந்த கொலை சம்பவம் அவருடன் அறையில் தங்கியிருத்த நண்பர் ஒருவர் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது ஆசாப் இறந்து இருந்ததாக தெரிவித்தார் என்று கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தேசிய தலைநகரில் பாஸ்வா பால் பகுதியில் 42 வயதான நிலம் வியாபாரி மற்றும் ஒரு சிறுவன் தனித்தனி சம்பவங்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மேற்கு டெல்லியின் விகாஸ்புரி பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத, 35 வயதுடைய ஒருவரை சுட்டுக் கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் டெல்லியில் உள்ள சிவப்பு விளக்கு அருகே நந்த் நகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு 2 பேரைக் கொன்றனர். இந்த இரட்டைக்கொலை குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: