தமிழ்நாட்டில் ரயில்வேயில் பணியாற்றும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: தெற்கு ரயில்வே துறை இந்திய மொழியை திணிக்க முயற்சிப்பதாக ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ரயில்வேயில் வட இந்திய பணியாளர்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளில் அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் ரயில்வேயில் பணியாற்றும் வட இந்தியர்கள் தமிழ் கற்றுக்கொள்வதை கட்டாயமாக்க வேண்டும். ரயில்வே அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்று உத்தரவிட்டு இருப்பது புதிய சிக்கலுக்கு வழி வகுக்கும். பயணச்சீட்டு வழங்கும் தமிழ் தெரியாத வட இந்திய ஊழியர்கள் தவறாக வேறு ஊர்களுக்கு பயணச்சீட்டு தருவது வாடிக்கையகிவிட்டது என்று கூறியுள்ளார்.

Related Stories: