காவிரி நீரை பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தராதது ஏன்?: தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் கண்டனம்

சென்னை: காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு இதுவரை மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்காதது கண்டனத்துக்குரியது என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் வீராணம் குடிநீரைப் பெறும் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை  எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே முதல்வர் பழனிச்சாமி கவனம் செலுத்தி வருகிறார்.

Advertising
Advertising

காவிரி ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமருக்கு ஒரு கடிதம் கூட  பழனிசாமியின் அரசு இதுவரை எழுதியதாக தெரியவில்லை. காவிரி தண்ணீர் பெறுவது பற்றி இதுவரை  ஒருவார்த்தை கூட அவர் பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

Related Stories: