சொல்லிட்டாங்க...

அதிமுகவில் ஒற்றை தலைவரா, இரட்டை தலைவரா என்ற பிரச்னையால் தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து இருக்கிறது.

- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்
Advertising
Advertising

மீண்டும் பாஜ ஆட்சி அமைந்துள்ளதால் அவர்கள் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை தொடருவார்கள்.

- மார்க்சிஸ்ட் பொதுச்ெசயலாளர் சீதாராம் யெச்சூரி

மத்திய, மாநில அரசுகள் தகுந்த வேலைவாய்ப்பை உருவாக்கி ஏழ்மை இல்லாத நிலையை ஏற்படுத்தி, குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

காவிரி நீரை பெற எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியை கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்தி வருகிறார்.

- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: