ஹெல்மட் விழிப்புணர்வு முகாம்

ஆலந்தூர்: மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ‘கட்டாய ஹெல்மட்’ பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.இதில், புதியதாக லைசன்ஸ் பெற வருபவர்களுக்கு ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து, விபத்து படங்களுடன் விளக்கி கூறப்பட்டது.

மேலும் ஹெல்மட் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு, லைசன்ஸ் ரத்து செய்யப்படுவது குறித்தும் விளக்கி கூறப்பட்டது. முன்னதாக மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் தலைமையில் ஆலந்தூரில் நடைபெற்ற வாகன சோதனையில் ஹெல்மட் அணியாத 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: