நிலமோசடி விவகாரத்தில் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

டெல்லி: நிலமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வதேரா, லண்டனில் ரூ.18 கோடியில் சொத்துகளை வாங்கினார். இதில், சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் நடந்ததாக வதேரா, அவருடைய உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோர் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

ஆனால் அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது. இதை எதிர்த்து வதேரா டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவ சிகிச்சைக்காக 6 வார காலம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து அளித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் மருத்துவ சிகிச்சைக்காக 6 வார காலம் வெளிநாடு செல்ல டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories: