அறிவிப்புக்கு முன்னரே கிளான்ஸா புக்கிங் துவக்கம்

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரு நிறுவனங்களின் இணைப்பை தொடர்ந்து, விற்பனைக்கு வரும், முதல் மாடலாக கிளான்ஸா இருக்கிறது. ஹேட்ச்பேக் ரகத்தில் உருவாகியுள்ள இந்த காரை வருகிற ஜூன் மாதம் 6ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுஸுகியின் பலேனோ கார்தான் தற்போது, டொயோட்டோ பேட்ஜில் கிளான்ஸா என்ற பெயரில் விற்பனைக்கு களமிறங்க இருக்கிறது. இதன் டீலர்கள் டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னரே புக்கிங்கை துவக்கியுள்ளனர். பழைய பலேனோவுடன் ஒப்பிட்டு பார்த்தால் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ரேடியேட்டர் கிரில் அமைப்பு உள்ளிட்டவற்றில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிரில்லானது இரண்டு குரோம் பூச்சு கொண்ட விங் அமைப்பை புதுமையாக பெற்றுள்ளது. அதேபோன்று, காரின் உட்புறத்திலும் பெயரளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertising
Advertising

இந்த கார், சுஸுகி நிறுவனத்தின்கீழ் தயாரிக்கப்பட்டபோது, அதன் குஜராத் பிளாண்ட்டில் உற்பத்தி நடந்தது. ஆனால், தற்போது இந்த கார் பெங்களூருவில் உள்ள டொயோட்டாவின் பிடாடி பிளாண்ட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காருக்கு 3 வருடங்கள் / 1 லட்சம் கிமீ வாரண்டியினை டொயோட்டா நிறுவனம் வழங்க இருக்கிறது. கிளான்ஸாவின் வி மாடலானது மாருதி பலேனோவின் ஆல்பா ட்ரிமிலும், ஜி மாடலானது பலோனோவின் ஜெட்டா ட்ரிம் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், கிளான்ஸா ப்ளூ, சில்வர், க்ரே, ஒயிட் மற்றும் ரெட் ஆகிய ஐந்து வண்ண தேர்வில் கிடைக்கிறது.

இந்த காரில், பிஎஸ்-6 தரத்திலான, 1.2 லிட்டர் கே12எம் விவிடி என்/ஏ 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 82.94 பவரையும் (61 kW), 113 என்எம் டார்க்கையும் வெளப்படுத்தும் திறன் கொண்டது. இது, லிட்டருக்கு 21.01 கி.மீ மைலேஜ் தரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், 5 ஸ்பீடு எம்டி அல்லது 19.56 கிமீ/லி சிவிடி ஆகிய ஆப்ஷன்களிலும் இந்த கார் கிடைக்கிறது. அதேசமயம், இந்த கிளான்ஸா கார், டொயோட்டா நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வரவிருப்பதால், பலேனோவை காட்டிலும் கணிசமான அளவு விலை உயர்வு பெறலாம் எனவும் கூறப்படுகிறது.

Related Stories: