ஸ்டேஷனையே ஆட்டுவிக்கும் கில்லாடி ஹெட்கான்ஸ்டபிள்

மாங்கனி மாவட்டத்தின் ஜலகண்டாபுரம் போலீஸ் ஸ்டேஷன் மொத்தமும், ஒரு ஹெட்கான்ஸ்டபிளின் கன்ட்ரோலில் தான் இயங்குகிறதாம். பாவப்பட்ட மக்கள், தங்கள் குறைகளை முறையிட வந்தால் கூட, இந்த தனிப்பிரிவு ஹெட் கான்ஸ்டபிளை தாண்டி, எஸ்.ஐ.,யை கூட பார்க்க முடியாதாம். இவரது நடவடிக்கையை பார்த்து, தேர்தல் காலத்தில் இட மாறுதல் பெற்று வந்த இன்ஸ்பெக்டரே அதிர்ந்து போய்விட்டாராம். வழக்கு விசாரணையில் அதிகம் மூக்கை நுழைப்பதோடு, அவரே பஞ்சாயத்து பேசி அனுப்புவதும் ஸ்ேடஷன் போலீசாரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். அப்புறம் சந்துக்கடை, சீட்டாட்டம், செம்மண் கடத்தல் என்று அனைத்துக்கும் ரேட்டு பேசுவதும் இவர் தானாம். இந்த வகையில் மட்டும் மாதத்துக்கு 2லட்சம் கல்லா கட்டுறாராம்.

Advertising
Advertising

தனக்கு தம்படி தேறும் இடங்களில் போலீசார் ரோந்து போவதையும் நைசாக பேசி, தடுத்து விடுகிறாராம். முக்கிய சம்பவங்கள் ஏதாவது நடந்தால் உடனடியாக மேலிடத்திற்கு தகவல் தெரிவிப்பதில்லையாம். கடைசி நேரத்தில் மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி கூறுவதிலும் அய்யா கில்லாடியாம். மாவட்ட தலைமையிடத்தில் 3 வருஷம் இருந்தவரு என்பதால், இவர் கூறுவதை உயரதிகாரிகள் அப்படியே நம்பிவிடுகிறார்களாம். இதுவரை எதுவும் செய்ய முடியாத ஸ்டேஷன் போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டமே, அய்யாவை விஜிலென்சில் சிக்க வைக்க ஆயத்தமாகிட்டு இருக்காங்களாம். கண்டிப்பா சீக்கிரம், எங்களுக்கு நல்லது நடக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட காக்கிகள்.

Related Stories: