8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும் : அன்புமணி அறிக்கை

சென்னை:  பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்றும், சாலைக்கான நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.

தமிழ்நாட்டு உழவர்கள் நலனை பாதிக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இத்திட்டத்தை எதிர்த்து  வழக்குத் தொடர்ந்து தடை பெற்றேன். அந்த தடையை எதிர்த்துதான் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. மத்திய அரசின் சார்பில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்பதை உணர்ந்துதான் உச்ச நீதிமன்றத்தில் எனது சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதன் மூலம் திட்டத்தை கைவிடச் செய்ய பா.ம.க. போராடும்.

Related Stories: