தெலங்கானா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெலங்கானாவில் கடந்த ஒரு மாதகாலமாக வெயில் கொளுத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை இருந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

Advertising
Advertising

இந்நிலையில் வருகிற செவ்வாய் கிழமை வரை வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் எனவும், இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிபட்சமாக நேற்று ராமகுண்டம் பகுதியில் 45.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், கம்மம் பகுதியில் 45 டிகிரி செல்சியசும், ஐதராபாத்தில் 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

Related Stories: