வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேரள போலீசாருக்கு அனுமதியில்லை: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

திருவனந்தபுரம்: கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீணா கூறியதாவது: கேரளாவில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பாதுகாப்பு அறையில் இருந்து ஒரு நேரத்தில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்கும் மேஜைக்கு கொண்டு  வரப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொது பார்வையாளருக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி உண்டு. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் குலுக்கல் மூலம் ேதர்வு செய்யப்படும் 5 விவிபேட்களில் பதிவான ரசீதுகள்  எண்ணப்படும். இரவு 8 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை முடிவடையும் என்று கருதுகிறோம்.

கேரளாவில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கேரள போலீசாருக்கு அனுமதியில்லை. மத்திய போலீஸ் படையினர் மட்டுமே காவல் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே கேரள ஆயுதப்படை போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்கும் வெளியேதான் ேகரள போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

Related Stories: