ஆந்திராவிலிருந்து லாரியில் அடைத்து கேரளாவுக்கு கடத்திய 200 மாடுகள் மீட்பு

சென்னை: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு உணவிற்காக, பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் ஏற்றி சென்ற மாடுகளை மதுராந்தகம் போலீசார் மடக்கி பிடித்தனர். லாரிகளை பறிமுதல் செய்து, மாடுகளை கோ-சாலையில் ஒப்படைத்தனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் வழியாக ஆந்திராவில் இருந்து, கேரளாவுக்கு உணவுக்காக பாதுகாப்பற்ற முறையில் மாடுகள் லாரிகளில் ஏற்றி செல்வதாக மதுராந்தகம் போலீசாருக்கு, விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் மூலம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று மாலை பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த 4  லாரிகளை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 200க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்தது தெரியவந்தது.

Advertising
Advertising

விசாரணையில், மாடுகளை உரிய அனுமதியின்றி, பாதுகாப்பற்ற முறையில் கேரளாவுக்கு உணவுக்காக ஏற்றி செல்வது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார், லாரிகளை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த மாடுகளை மீட்டு, கோ சாலையில் ஒப்படைத்தனர். தொடர்ந்து லாரி டிரைவர்களிடம் விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அச்சிறுப்பாக்கத்தில்  லாரி ஒன்றில் சுமார், 60 மாடுகள் கேரளாவுக்கு அனுமதியின்றி கடத்தப்படுவதை விலங்குகள் நல அமைப்பின் உதவியோடு, அச்சிறுப்பாக்கம் போலீசார் மீட்டு கோ சாலையில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: