கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை....ஒருவர் கைது

கோவை: கோவையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை போத்தனூர் அருகே ஜான் பிரிட்டோ என்பவர் தனது  நண்பர் பிரவீனுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது மதுக்கடையில் ஜான் பிரிட்டோவுக்கும் போத்தனூரை சேர்ந்த காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகியோருக்கும் இடையே போதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சண்டை முடிந்த பிறகு  ஜான் பிரிட்டோ வீடு திரும்பி உள்ளார்.

Advertising
Advertising

அப்போது  ஜான் பிரிட்டோவை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த காட்வின் ராஜ், மில்டன், குட்டி ஆகிய மூவரும்  ஜான் பிரிட்டோவின் வீட்டின் அருகே கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அங்கு இருந்த பொதுமக்கள்  ஜான் பிரிட்டோவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் பரிதாபமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜான் பிரிட்டோ உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் மீதமுள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: