கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு

டெல்லி : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்ந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் உத்தர் மக்களவை தொகுதியிக்குட்பட்ட 1 வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 200ம் எண் வாக்குச்சாவடியில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும் அதற்கு பதிலாக நாளை மறு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பஞ்சாப் மாநிலம் அமிர்தசர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 123வது வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு மே 22ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் இவ்விறு வாக்குச்சவாடிகளிலும் வேட்பாளர்கள் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பணிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் முடக்கிவிட பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில் குறிப்பிட்ட வாக்குசாவடியில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களுக்கு அம்மாநில அரசுகள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: