ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி வந்த போது நாட்டு வெடிகுண்டை கடித்து புள்ளி மான் படுகாயம்

* வனத்துறையினர் மீட்டனர்

ஆம்பூர் : ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு காப்புக்காடுகளில் அதிகளவில் மான்கள் வசித்து வருகின்றன. தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக குடிநீர் தேடி மான்கள் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறி அருகிலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஆம்பூர் அடுத்த ஜமீன் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள காமராஜர் நகர் அருகே தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மான் ஒன்று புகுந்தது.

பின்னர், அந்த மான் அருகிலிருந்த வனப்பகுதியை ஒட்டிய இடத்திற்கு சென்றபோது அங்கிருந்த ஒரு பொருளை கடித்தது. இதில் அந்த பொருள் வெடித்து மான் வாய் கிழிந்து ரத்த வெள்ளத்தில் தொங்கியது. இதை பார்த்த பொதுமக்கள் அறிந்த ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்,து ஆம்பூர் வன  காப்பாளர்கள் சவுந்தரராஜன், நல்லதம்பி, சுரேஷ், செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 4 மணிநேரம் போராடி மானை மீட்டனர். பின்னர் அந்த மானை  ஆட்டோ மூலமாக ஆம்பூர் வனச்சரக அலுவலகத்திற்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர்.

Related Stories: