மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி

சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள பாஜ அலுவலகத்தில் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் அளித்த பேட்டி: சாதிவாரி கணக்கெடுப்புடன் பொருளாதார ரீதியான கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என ராபின் ஹூட் ராகுல்காந்தி கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்புடன் பொருளாதார கணக்கெடுப்பை எதற்கு எடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவரின் பொருளாதாரம் அவரது உழைப்பால் சேர்க்கப்பட்டது.

அதை எப்படி பிறருக்கு பிரித்து கொடுக்க முடியும். 2006ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொன்ன கருத்தையே இப்போது ராகுல்காந்தியும் சொல்கிறார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் இதை தெரிவித்துள்ளனர். காங்கிரசார் பிரித்துக் கொடுக்கும் பொருளாதாரம், ஊடுருவல்காரர்களுக்கு சென்று சேர்ந்துவிடுமோ என்றுதான் கேள்வி எழுப்பினார். ஆனால் அதை இஸ்லாமியர்களுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் திசை திருப்பி குற்றம்சாட்டுகின்றனர்.

ஊடுருவல்காரர்கள் என்பது நம்நாட்டின் குடிமக்கள் கிடையாது. வங்கதேசம் போன்ற பிற நாடுகளில் இருந்து வருபவர்களை நம்மால் ஏற்க முடியாது. உலக அளவில் 54 நாடுகள் ஊடுருவல்காரர்களை திருப்பி அனுப்பியுள்ளது. இலங்கை தமிழர்களை இவர்களுடன் சேர்க்க மாட்டோம். என்னதான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் மோடி என்று திசைதிருப்பினாலும் கண்டிப்பாக பாஜ 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையில் அமைதியான ஆட்சி நடந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கோ, பிற மதங்களுக்கு எதிராகவோ எந்தவிதமான சம்பவங்களும் நடக்கவில்லை.

The post மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற மதங்களுக்கு எதிராக எந்த சம்பவங்களும் நடக்கவில்லை: பாஜ மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: