நீதிபதி தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்ட எம்பிக்கள் பெயரை வெளியிட முடியாது: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு

புதுடெல்லி: ஐதராபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.நாகார்ஜூனா ரெட்டி . இவர், பல்வேறு வழ க்கு விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய மாநிலங்களவை எம்பிக்கள் 60 பேர் நாடாளுமன்றத்தில் தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் சில எம்பிக்கள் வாபஸ் பெற்றனர். தீர்மானத்தில்   கையெழுத்திட்ட வர்கள் விபரம் தரக் கோரி மல்லீஸ்வர ராவ் என்பவர் ஆர்டிஐ மூலம் மனு செய்தார். இதுதொடர்பான மேல்முறையீடு மனுவில் தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவா அளித்த உத்தரவில், ‘‘ஆர்டிஐ சட்டப்பிரிவு 8(1) (சி)ன்கீழ், இத்தகவலை வெளியிட விலக்கு உள்ளது. இதுபோன்ற தகவல்களை வெளிப்படுத்துதல், எம்பிக்களின் கடமையை பாதிப்பதோடு,  சுதந்திரத்தையும் பாதிக்கும். நாடாளுமன்ற விதிமுறையை மீறுவதாகும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: