டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சர் ஆஜர்

டெல்லி: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சர் விசாரணைக்காக ஆஜரானார். ஐசிஐசிஐ வங்கி தலைவராக சாந்தா கோச்சார் இருந்தபோது, ரூ.1,875 கோடி வங்கி பணத்தை வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்துக்கு கடனாக வழங்கியுள்ளார். இந்த கடனை பெற்ற சிறிது நாட்களில், கடனை வழங்கியதற்கு பிரதிபலனாக சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் பல கோடி ரூபாயை முதலீடு செய்தது.

இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. கடந்த மார்ச் மாதத்தில் ஐசிஐசிஐ.ன் முன்னாள் தலைவர்  சாந்தா கோச்சார், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரின் மும்பை, அவுரங்காபாத் அலுவலகம் மற்றும் வீடுகள் என 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது சாந்தா கோச்சாரும், அவரது கணவர் தீபக் கோச்சாரும் டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர்.

Related Stories: