புதுடெல்லி: ஐசிஎஸ்இ தேர்வில் முதல் முறையாக 12ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் நூறு சதவீத மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளனர். ஐசிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அக்கவுன்சிலின் தலைமை நிர்வாகியும் செயலாளருமான ஜெரி ஆரத்தோன் நேற்று வெளியிட்டார். இதில் 10ம் வகுப்பில் மாணவிகள் 99.05 சதவீதமும் மாணவர்கள் 98.12 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, 12ம் வகுப்பில் மாணவிகள் 97.84 சதவீதமும் மாணவர்கள் 95.40 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10, 12 வகுப்பு தேர்வு முடிவில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.