அருணாச்சலில் நிலநடுக்கம்

பீஜிங்: அருணாச்சலப் பிரதேசம், சீனா எல்லைப் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று  முன்தினம் நள்ளிரவு 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. தலைநகர் இடாநகரில் இருந்து தென்கிழக்கே 40 கி.மீ. மற்றும் தென்மேற்கே 180 கி.மீ.  தொலைவில் இது நிலைகொண்டிருந்தது.

மேலும், சீனாவின் எல்லையோர கிராமங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. மெடாக் கவுன்டியின் நியீங்சி நகரில் அதிகாலை 4.15 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகளும், கட்டிடங்களும் அதிர்ந்தன. இதன் காரணமாக தூக்கத்தில் இருந்து எழுந்த மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறினார்கள்.

மக்கள் சாலைகளில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடி தகவல்கள் கிடைக்கவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: