அக்‌ஷய் குமாருடன் பிரதமர் பேட்டி சினிமாவில் நடிக்க வாய்ப்பை தேடுகிறார் நரேந்திர மோடி: காங்கிரஸ் விமர்சனம்

‘‘மே 23ம் தேதி மக்களால் நிராகரிக்கப்படவுள்ள, தோல்வியடையும் அரசியல்வாதி பாலிவுட்டில் மாற்று வேலை தேடுகிறார்” என பிரதமர் மோடி - நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை பாலிவுட்டின் பிரபலமான நடிகர் அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்தார். பிரதமர் மோடி இதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, எண்ணங்கள், ரசனை உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டி ஊடகங்களில் வெளியாகியது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்த பேட்டியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அக்‌ஷய்குமார் சிறந்த நடிகர். அவரை நமக்கு பிடிக்கும். அவர் வெற்றி பெற்ற நடிகர். இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்தவர், இந்தியாவில் வேலை வாய்ப்பை அழித்தவர், விவசாயிகள் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை நரகமாக்கிய வெற்றி பெறாத அரசியல்வாதி, அக்‌ஷய்குமாரை விட தற்போது சிறந்த நடிகராக முயற்சிக்கிறார். மே 23ம் தேதி மக்களால் நிராகரிக்கப்படவுள்ள, தோல்வியடையும் அரசியல்வாதி பாலிவுட்டில் மாற்று வேலை தேடுகிறார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. மோடியை போன்று தோல்வியடையும் அரசியல்வாதி பாலிவுட்டில் வெற்றிபெற்ற நடிகராகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: