பேஸ்புக்லயா ஓட்டு கேட்குறீங்க... பிடிங்க நோட்டீஸ்: தவிக்கும் பிஜேடி வேட்பாளர்

தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கெடு முடிந்த பின்னர் பேஸ்புக் மூலமாக பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பிஜூ ஜனதா தளம் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒடிசாவில் 41 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளுக்கு மூன்றாவது கட்டமாக நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரம் செய்வதற்கான கெடு கடந்த ஞாயிறன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் பாராபட்டி-கட்டாக் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பிஜூ ஜனதா தள வேட்பாளர் தீபாஷிஷ் சமந்த்ரே திங்களன்று சமூக வலைதளங்கள் மூலமாக ஆதரவு திரட்டியுள்ளார். பேஸ்புக்கில் தனக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுத்து அவர் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி வைரலாக பரவியது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமீறல் என புகார் எழுந்துள்ளது. பேஸ்புக்கில் பிரசாரம் செய்தது தொடர்பாக 48 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: