மோடியை குறிக்கும் `காவலாளி திருடன்’ வாசகத்தை தொடர்ந்து பயன்படுத்துவோம்: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தகவல்

புதுடெல்லி: பிரதமர் மோடியை காவலாளியே திருடன் என குறிப்பிடும் வாசகத்தை தொடர்ந்து பயன்படுத்துவோம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விமர்ச்சித்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘காவலாளியே திருடன்’ என்று மோடியை விமர்ச்சித்து வருகிறார். இதற்கிடையே, ரபேல் வழக்கு தொடர்பான சீராய்வு மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமர் மோடியை திருடன் என குறிப்பிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையில், ராகுல் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வக்கீலும் காங்கிரஸ் ெசய்தி தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘‘ரபேல் ஒப்பந்த ஊழலில் பிரதமர் மோடி மற்றும் அவருக்கு  உடந்தையாக இருந்த மத்திய அமைச்சர்களை காவலாளியே திருடன் என எதிர்க்கட்சிகள் கடந்த 18 மாதமாக அழைத்து வருகின்றன. நாங்கள் உருவாக்கிய இந்த வார்த்தையை அரசியல் வாசகமாக தொடர்ந்து எதிர்காலத்திலும்  பயன்படுத்துவோம். இந்த வார்த்தையை  நீதிமன்றம் சொன்னதாக குறிப்பிடுவது எங்கள் நோக்கமல்ல. ஆனாலும் தொடர்ந்து இந்த வார்த்தையை அரசியல் வாசகமாக பயன்படுத்துவோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: