மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்பாக இல்லை: தங்க தமிழச்செல்வன் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி பாதுகாப்பாக இல்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் அதிகாரி ஒருவர் அதிமீறி நுழைந்தது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினார். இரவு நேரங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு காவல் இருக்க வேட்பாளர்களின் முகர்வர்களை அனுமதிக்காததால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று பெண் தாசில்தார் உள்ளிட்ட சிலர் காலை 3 மணியளவில் அனுமதியில்லாமல் சென்று இரண்டு மணி நேரம் அங்கேயே இருந்து சில தகவல்களை சேகரித்ததாக செய்திகள் வந்தது. இந்த விவகாரத்தில் பெண் தாசில்தார் சம்பூர்ணம் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய தங்க.தமிழ்ச்செல்வன், வாக்கு எண்ணும் மையத்தில் இரவு நேரங்களில் தவறுகள் நடப்பதால் வேட்பாளர் முகவர்கள் இரவு நேரங்களிலும் இருக்க வேண்டும் என கூறினார். மேலும், இரவு 10 மணிக்கு மேல் முகவரை அனுமதிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: