4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான 39 நாடாளுமன்ற தொகுதி, காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 18ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது. இதில் அமமுக வேட்பாளர்கள் பரிசு பெட்டி சின்னத்தில் போட்டியிட்டனர். இதேபோல், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்குகிறது.

 ஏற்கனவே, திமுக சார்பில் இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு பிரசாரமும் தொடங்கிவிட்டது. இதேபோல், அமமுக சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தயார் செய்துவிட்டார். இதனால், திட்டமிட்டபடி 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை டிடிவி.தினகரன் இன்று காலை 7 மணியளவில் வெளியிட உள்ளார். அமமுகவிற்கு டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ள நிலையில் நாளை கட்சியை பதிவு செய்யும் பணியையும் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: