பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகம் உட்பட 13 மாநிலத்தில் சைபர், டிஎன்ஏ ஆய்வு மையம்

புதுடெல்லி: ‘பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால், தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சைபர் தடயவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படுகின்றன. இது குறித்து மத்திய உள்துறை  அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 131.09 கோடி செலவில் சைபர் தடயவியல் ஆய்வு மையங்கள் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட  உ.ள்ளன. இதற்கான பயிற்சி மையங்களும் 223.19 கோடியில் அமைக்கப்படுகிறது. அருணாசலப் பிரதேசம், இமாச்சல பிரதேசம்,  மத்தியப் பிரதேசம், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே சைபர்  தடயவியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 3,664 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியின் கீழ் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: