சென்னை: திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தொகுதி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதுபற்றிய விவரம்: திருப்பரங்குன்றம்- தொகுதி பொறுப்பாளர்களாக இ.பெரியசாமி எம்எல்ஏ (துணை பொதுச் செயலாளர்), மு.மணிமாறன் (மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்), திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றியம்- பி.மூர்த்தி எம்எல்ஏ (மதுரை வடக்கு மாவட்ட செயலாளர்), மேற்கு ஒன்றியம்- சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்), தெற்கு ஒன்றியம்- தங்கம் தென்னரசு எம்எல்ஏ (விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர்), வடக்கு பகுதி- கோ.தளபதி (மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர்), தெற்கு பகுதி-கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ (சிவகங்கை மாவட்ட செயலாளர்), அவனியாபுரம் கிழக்கு பகுதி-பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ (சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர்) மேற்கு பகுதி-இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ (திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்) மற்றும் இரா.ஆவுடையப்பன், (திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர்), துரை. சந்திரசேகர் எம்எல்ஏ (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்), ஜெ. அன்பழகன் எம்எல்ஏ (சென்னை மேற்கு மாவட்ட செயலாளர்), கம்பம் நா.ராமகிருஷ்ணன் (தேனி மாவட்ட பொறுப்பாளர்), கா.முத்துராமலிங்கம் (ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்), ஆவடி சா.மு.நாசர் (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர்), நிவேதா எம்.முருகன் (நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர்), கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ (விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர்) எம்எல்ஏக்கள் எம்.ஏ.ஆண்டி அம்பலம், பி.என்.பி.இன்பசேகரன், ஜெ.எல்.ஈஸ்வரப்பன், வசந்தம் க.கார்த்திகேயன், கோவி.செழியன்.ஓட்டப்பிடாரம்- தொகுதி பொறுப்பாளர்களாக கே.என்.நேரு எம்எல்ஏ (திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர்), அனிதா ராதாகிருஷ்ணன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர்), தூத்துக்குடி ஒன்றியம்- கனிமொழி எம்பி (மாநில மகளிர் அணி செயலாளர்), கருங்குளம் வடக்கு ஒன்றியம்- எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ (மாநில சிறுபான்மை நலஉரிமை பிரிவு துணைத் தலைவர்), வைகுண்டம் மேற்கு ஒன்றியம்- பெ.கீதா ஜீவன் எம்எல்ஏ (தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்), ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம்-கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்எல்ஏ (விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர்), முத்தையாபுரம் பகுதி-மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ (சென்னை தெற்கு மாவட்ட செயலாளர்), போல்பேட்டை பகுதி- என்.சுரேஷ்ராஜன் எம்எல்ஏ (கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்) மற்றும் எஸ்.ரகுபதி எம்எல்ஏ (புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்) மு.அப்துல் வகாப் (திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர்); சிவ.பத்மநாபன் (திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்), வெ.கணேசன் எம்எல்ஏ (கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர்), மனோ.தங்கராஜ் எம்எல்ஏ (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர்), எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, ப.ரங்கநாதன், மு.பெ.கிரி, இ.கருணாநிதி, கே.எஸ்.ரவிச்சந்திரன்.