அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு லூசு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி


சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது : தரமற்ற நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு அதானி கொடுத்து ஆயிரம் கோடி ஊழல் மோடி செய்துள்ளார். தமிழர்களை மோடி திருடர்கள் என்று சொல்லி இருக்கிறார். பிரதமர் மோடி தப்பித்தவறி சென்னை வந்தால் வேட்டி கட்டிக்கொண்டு வரக்கூடாது. தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள கூடாது என்றால் பாகிஸ்தானில் பிறந்த அத்வானியை ஏன் இந்தியாவில் துணை பிரதமராக்கினார்கள். பிரதமர் மோடி கொஞ்சம் வாயை மூடிக் கொண்டு இருக்கவேண்டும்.

தமிழர்களை நீங்கள் சீண்டி பார்க்க கூடாது. தமிழர்களை திருடர்கள் என்று சொன்ன பிரதமர் மோடியை நான் மனிதனாக எண்ணவில்லை. அவர் மிருகம் போல் தான் இருகிறார். எங்களை பொறுத்தவரை எங்களை இழிவு படுத்தினால், நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாறி விட்டார். புத்திசாலி என்று நினைத்தேன். செல்லூர் ராஜூ திருந்த மாட்டார். அவர் ஒரு லூசு. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு உடனிருந்தனர்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு லூசு: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: