பூத் சிலிப் ஒழுங்காக வினியோகிக்காததால் வோட்டர் ஐடி மூலம் வாக்களிப்பதில் காலதாமதம்: வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆவேசம்

சென்னை: பூத் சிலிப் ஒழுங்காக வினியோகிக்காததால் வோட்டர் ஐடி மூலம் வாக்களிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நேற்று நடந்தது. ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிக்க வசதியாக அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, பஞ்சாயத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வீடு, வீடாக சென்று வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த முறை புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் முறையாக வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே பூத் சிலிப் கிடைத்தது. அவர்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்களித்தனர். பூத் சிலிப் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை மூலம் ஓட்டு போட சென்றவர்கள் தான் ரொம்ப பாதிக்கப்பட்டனர். வாக்குச்சாவடிகளில் அடையாள அட்டையில் உள்ள நம்பரை (எப்பிக் நம்பர்) வைத்து கொண்டு வாக்காளர் பெயர் எந்த வரிசையில் உள்ளது என்பதை கண்டுபிடிப்பதில் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனால், ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு சிறிது நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. வரிசை எண் தெரிந்தவர்கள் மட்டுமே உடனடியாக தங்களுடைய பெயரை சரிபார்த்து வாக்களிக்க முடிந்தது. இதனால், பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்திருந்தவர்கள் அப்போ எதுக்கு இந்த கார்டை அளித்தீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சியை காணமுடிந்தது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானம் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: