பாஜவுக்கு ஓட்டு போடுவீங்களான்னு கேட்டார் ஜெயலலிதா போடுங்கன்னு இப்போ கேட்கறாங்க... காமெடி நடிகர் மயில்சாமி குமுறல்

* ஜெயலலிதா இல்லாத அதிமுக இப்போது எப்படி இருக்கிறது? ஜெயலலிதா மறைந்த பிறகே அதிமுக கட்சி செத்து போச்சு. அதில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது இருக்கிற அதிமுகவை அண்ணா திமுக என்று சொல்லக்கூடாது அடிமை திமுக என்று தான் சொல்ல வேண்டும். டெல்லிக்கு பயந்து ஒட்டுமொத்தமாக  கூனிக்குருகி விட்டனர். ஜெயலலிதா பாஜவிற்கு ஒட்டு போடுவீங்களா என்று கேட்டார். இப்போது உள்ளவர்கள் பாஜவிற்கு ஓட்டு போடுங்க என்று கேட்கின்றனர்.

* அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுகவுடன் கூட்டணி சேருவதற்கு எப்படி பிசினஸ் பண்ணாங்க அப்படிங்கிறதை நேரடியாக நாமே பார்த்தோம்.  இப்படி இருந்தால் ஜனநாயகம் எப்படி இருக்கும்.  நல்ல கட்சியாக இருந்தால் கூட்டணி சேர்ந்திருக்க மாட்டார்கள். எந்த கட்சியில் இருந்து எவ்வளவு பணம் கிடைக்கும் என்று தான் நினைக்கின்றனர்.

* வாக்காளர்களின் இன்றைய மனநிலை எப்படி இருக்கிறது, அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஓட்டிற்கு மக்கள் காசு வாங்கும் போது, எப்படி நல்ல தலைவர்கள் வருவார்கள். மக்கள் காசு வாங்காமல் இருந்தால் தான் நல்ல தலைவர்ள் வருவார்கள். வாக்காளர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். என்றைக்கும் ஓட்டுக்காக காசு வாங்கி விட்டார்களோ அப்போதே அவர்கள் நல்லவர்கள் கிடையாது. காசு கொடுப்பவர்களை செருப்பால் அடித்தால் தான் நல்ல வாக்காளர்கள்.

* கடந்த 5 ஆண்டுகால பாஜ ஆட்சி பற்றி உங்களது கருத்து? கடந்த 5 ஆண்டுகளாக நாடு பிச்சை எடுக்காத குறைதான். நானே பாதிக்கப்பட்டேன். என்னுடைய பொருளாதாரம் கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கப்பட்டது. வருமானமே இல்லை. என்னுடைய வாழ்க்கையே வட்டியில் தான் இப்போது வரை போகிறது. என் நிலைமையே இப்படி என்றால், ஏழை, எளிய மக்களின் நிலை என்னவாகும். பணமதிப்பிழப்பு வந்ததற்கு பிறகு கருப்பு பணம் ஒழியவில்லை. 6 மாதத்திற்கு ஒரு முறை பணத்தை மாற்றினாலும் பதுக்கி வைப்பவர்கள் பதுக்கி தான் வைப்பார்கள். அவர்களுக்கு நேர்மையாக வாழ்வது பிடிக்காது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: