திமுக பவள விழா விழாக்கோலம் பூண்ட காஞ்சி

சென்னை: திமுக ஆரம்பித்து 75 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, அதன் பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட பந்தலுக்குள் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பவள விழா ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டு, காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம். பூண்டுள்ளது. பொதுக்கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்று பேசுகிறார்.

கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதில், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்க உள்ளனர். காஞ்சிபுரம் மாநகர திமுக செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் நன்றி கூறுகிறார். விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் மற்றும் காஞ்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவினருடன் இணைந்து செய்துள்ளனர்.

* அண்ணா வீட்டையே அரங்குக்கு கொண்டு வந்த அற்புதம்
திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகில் அண்ணா வாழ்ந்த நினைவு இல்லம் உள்ளது. இந்த, இல்லத்தின் முகப்பு அப்படியே தத்ரூபமாக மேடை அருகில் அண்ணா வாழ்ந்த இல்லம் என அமைக்கப்பட்டுள்ளது.

The post திமுக பவள விழா விழாக்கோலம் பூண்ட காஞ்சி appeared first on Dinakaran.

Related Stories: