சென்னை பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பட்டமளிப்பு விழா மாணவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு அரசின் முயற்சியால் நடத்தப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றேன். அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு எடுக்க வேண்டியவர் முதலமைச்சர் தான். என்னை பொறுத்தவரை துணை முதலமைச்சர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் வாய்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால் அது குறித்து பேசுவதற்கு தமிழிசை யார்? குமரி அனந்தன் இல்லையென்றால் அவரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது. இளமைப் பருவத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்தவர் உதயநிதி ஸ்டாலின். பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகளில் வளர்ந்த உதயநிதி ஸ்டாலின், வருங்காலங்களில் இளைஞர்களின் வழிகாட்டியாக அமைவார். இவ்வாறு கூறினார்.
The post குமரி அனந்தன் இல்லையென்றால் தமிழிசையை மக்களுக்கு தெரியாது: அமைச்சர் பொன்முடி பதிலடி appeared first on Dinakaran.