நடிகை ஜெயப்பிரதா-பாஜ குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு..: சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்குப்பதிவு

லக்னோ: நடிகை ஜெயப்பிரதா-பாஜ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீங்கிய ஜெயப்பிரதா உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இதனை எதிர்த்து சமாஜவாதி கட்சி சார்பில் போட்டியிடும் ஆசம் கான், ஜெயப்பிரதாவுக்கு பாரதிய ஜனதாவுடன் இருக்கும் தொடர்பு பற்றி சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார். பொதுக்கூட்டத்தில் ஜெயப்பிரதா பெயரை நேரடியாக குறிப்பிடாமல் பேசிய ஆசம் கான், இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன் என்றார்.

ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள ஜெயப்பிரதா சமாஜ்வாதி கட்சியில் தலைவர் முதல் அனைவருமே பொறுப்பற்று பேசுபவர்கள் என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய ஆசம் கான் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜெயப்பிரதா பற்றியும் பாரதிய ஜனதா குறித்தும் தரம் தாழ்ந்து விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக பதிலளிக்குமாறு ஆஸம் கானுக்கு நோட்டீஸ் அனுப்ப மகளிர் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: