வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது: மு.க.ஸ்டாலின் கறார்

வேலூர்: வேலூரில் தேர்தலை நிறுத்தவே வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின் கூறியதாவது: மத்தியில் சர்வாதிகார மோடி ஆட்சியையும், மாநிலத்தில் உதவாத எடப்பாடி ஆட்சியை அகற்றவும் திமுகவுக்கு வாக்களியுங்கள். 40-க்கு 40 மக்களவைத் தொகுதியிலும், 22-க்கு 22 சட்டமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற பின் அதிமுக ஆட்சி அகற்றப்படும். வேலூரில் தேர்தலை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் திட்டம் போடுகின்றன. தேர்தலை நிறுத்தவே திட்டமிட்டு வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற 650 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டது என்று ஆங்கிலப் பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது. குடியாத்தத்தில் ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படும். இவ்வாரு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: