அதிமுக, பாஜ கூட்டணிக்கு பாடம் புகட்டுவோம்: விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு

ஈரோடு  மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் பசுவபட்டி கிராமத்தில் மத்திய மாநில  அரசுகளின் பல்வேறு திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தொழில்  வணிக அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின்  ஒருங்கிணைப்பாளர்களான சென்னிமலை கி.வே.பொன்னையன், எஸ்.பொன்னுசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உயர்  மின்னழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்து, அதிமுக அரசு பெரும் கொடுமை செய்துள்ளது. விவசாயிகளின்  நலனுக்கு முற்றிலும் எதிராகவே செயல்படும்  அதிமுக, பாஜ  கூட்டணிக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

எனவே ஈரோடு மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்கு மணிமாறனை புறக்கணிப்பது என முடிவு  செய்யப்பட்டது. மேலும், திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி கடந்த காலங்களில்  விவசாயிகளை, உடனிருந்து வழிநடத்தி பல்வேறு போராட்ட களங்களில் வெற்றி பெற  உதவி உள்ளார். எனவே, கணேசமூர்த்தியை வெற்றி பெறச் செய்வோம்’  என்ற முழக்கத்தின் கீழ் பிரசாரம் மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: