அனில் அம்பானிக்கு சாதகமாக கோர்ட் உத்தரவை திருத்தி பதிவேற்றிய 2 ஊழியர் கைது

புதுடெல்லி:  தொலை தொடர்பு வர்த்தகம் தொடர்பாக எரிக்சன் இந்தியா நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 550 கோடி பாக்கி தொைகயை தர உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.  நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலுவை தொகையை அனில் அம்பானி தராத நிலையில், கடந்த ஜனவரி 7ம் தேதி பாக்கி தொகையை செலுத்த கெடு விதித்த உச்ச நீதிமன்றம், அடுத்த முறை விசாரணையின்போது அனில் அம்பானி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

ஆனால், உச்ச நீதிமன்ற ஊழியர்கள் மானவ், தபன் ஆகிய இருவரும், அனில் அம்பானி நேரில் ஆஜராக தேவையில்லை என திருத்தி, உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். மேற்கண்ட 2 ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் உத்தரவிட்டார். டிஸ்மிஸ் செய்யப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: