இந்திய நாடாளுமன்றத்தில் 545 வேலைகள் காலி : சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கிண்டல் விளம்பரம்

டெல்லி: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில், பிரதமர் மோடி நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தியும் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்திய நாடாளுமன்றத்தில் 545 வேலைகள் காலியாக உள்ளன என்று மக்களவை எம்.பி-பதவிகளை கிண்டலடித்து  விளம்பரம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

நாடாளுமன்ற மக்களவையில் காலியாக உள்ள வேலைக்கு வயது நிர்ணயிக்கப்படவில்லை. அனுபவம், கல்வி தேவையில்லை. சம்பளம் மாதம், 1.9 லட்சம் ரூபாய். அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற, அவசியம் இல்லை. தங்குமிடம் இலவசம்; மானிய விலையில் உணவு. இலவசமாக, மூன்று தொலைபேசி,25 ஆயிரம் யூனிட் மின்சாரம். குடும்பத்தோடு, 34 முறை வெளிநாட்டு பயணம். பெட்ரோல், ரயிலில், ஏசி முதல் வகுப்பில் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யும் வசதி.

5 ஆண்டுகள் பணிபுரிந்தால், 20 ஆயிரம் குறைந்தபட்ச ஒய்வூதியம். ஆண்டுதோறும், 1,500 கூடுதல் ஓய்வூதிய வசதி, இன்னும் நிறைய வசதிகளோடு 545 வேலைகள் காலியாக உள்ளது என கிண்டலடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் சூழலில், மக்களவை உறுப்பினர் பதவியை வேலை போல பாவித்து கிண்டலாக இந்த விளம்பரம் சமூக ஊடகங்களில் வரைலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: