பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு: வாக்களித்து விட்டு மீண்டும் பணிக்காக ஐதராபாத் திரும்பிய போது சோகம்!

ஆந்திரா: ஐதராபாத் சென்று கொண்டிருந்த பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் பொதுத்தேர்தலில் தங்களது ஜனநாயக கடமை ஆற்றிவிட்டு பணி காரணமாக இருந்து 40 பயணிகளுடன் அரவிந்தா டிராவல்ஸ் பேருந்து ஐதராபாத் சென்றது. அப்போது ஐதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஜல்லிக்கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி பேருந்து மீது மோதியது. இதில் தீப்பிடித்து மளமளவென தீ பேருந்துக்கும் பரவியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இரண்டு வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் 4 பயணிகள் தீயில் சிக்கி உயிரிழந்தனர்; 20 பேர் தீக்காயங்களுடன் தப்பினர். தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து காயம் அடைந்தவர்களை மீட்டு குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பேருந்து டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழப்பு: வாக்களித்து விட்டு மீண்டும் பணிக்காக ஐதராபாத் திரும்பிய போது சோகம்! appeared first on Dinakaran.

Related Stories: