டீக்கு 13, காபிக்கு 17 ரூபாயா என்னா கணக்கு இது: ஓ.எஸ். மணியன் கிண்டல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் அளித்த பேட்டி:  டிடிவி தினகரனிடம் சென்றுள்ள ஒருவர் இருவரால் அதிமுகவுக்கு சேதாரம் கிடையாது. அவர்கள் அனைவரும் விரைவில் திரும்பி வந்து விடுவர்.  தினகரன் அணியோடு அதிமுக இணைவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறுவது சரியானது இல்லை. அதிமுகவுடன் தினகரன்  இணைவது  என்பது எந்த காலத்திலும் நடக்காது.

ஒவ்வொருவரும் அவரவர் கருத்துக்களை கூறலாம். அதன் அடிப்படையில் மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார். தினகரன் அணியில் உள்ளவர்கள்  விரைவில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று விடுவர். வேட்பாளருக்கு பூசணிக்காய் சுற்றினால் 150, டீ குடித்தால் 13, காபி குடித்தால் 17,  ஒரு இட்லிக்கு 17 என்று தேர்தல் செலவு கணக்கில் எழுதுவதாக தேர்தல் ஆணையம் விதித்த விதிமுறைகளை  அதிமுக ஏற்று கொள்ளவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: