சென்னை: தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனீல் பாலீவால் வெளியிட்ட அறிவிப்பு:சவுதி அரேபிய அமைச்சகத்தின், அல் காசிமிலுள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும் 55 வயதிற்கு உட்பட்ட ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை டெல்லியிலும், 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை பெங்களுருவிலும் நடைபெற உள்ளது.தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப 1.84 லட்சம் முதல் 5.09 லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படும். மேலும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 2.42 லட்சம் முதல் 7.59 லட்சம் வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இதுதவிர, இதர சலுகைகள் வழங்கப்படும்.