வண்டலூரில் மோடி பங்கேற்கும் கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டது

சென்னை : வண்டலூரில் மோடி பங்கேற்கும் கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் மற்றும் ஜி.கே.வாசன் படம் வைக்கப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி என தேமுதிக இன்னும் அறிவிக்காத நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் படம் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் படம் வைக்கப்பட்டதால் அதிமுக அணியில் தேமுதிக இடம் உறுதியாகி உள்ளது. தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட மேடையின் எல்.இ.டி திரையில் மோடி மற்றும் தலைவர்கள் படங்களுடன் விஜயகாந்த் படமும் இடம்பெற்றுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: