விமான படைக்கு சொந்தமான நிலம் மீட்பு

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி கிராமத்தில் இந்திய விமான படைக்கு சொந்தமாக சுமார் 52 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையம் செயல்பட்டது. பின்னர் விமான நிலையம்  மூடப்பட்டதால் கடந்த 8 ஆண்டாக இந்த இடத்தில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த இடத்தில் 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. இந்நிலையில், நேற்று இந்திய விமானப்படை அதிகாரிகள், பொன்னேரி வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

பின்னர், தனியார் பள்ளி சார்பில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த சுற்றுச்சுவரை பொக்லைன்  இயந்திரங்கள் மூலம் அகற்றி 5 ஏக்கர் பரப்பளவிலான விளையாட்டு மைதானத்தை மீட்டனர். இங்கு வசிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்று இடம் வழங்கப்பட்டதும் மீதமுள்ள இடத்தையும் மீட்க உள்ளதாக  விமான படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: