புதுடெல்லி: எதிர்வரும் மக்களவைத் தேர்தல் செலவு என்பது, வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக இருக்கும் என்று அமெரிக்க நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.மக்களவைக்கு 543 எம்பிக்களை தேர்வு செய்யும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஆகியவை கடந்த 2016ல் நடைபெற்றது. இதற்கான செலவு சுமார் 6.5 பில்லியன் டாலர் (₹46,150 கோடி). அதேவேளையில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவைக்கு நடந்த தேர்தலின் செலவு 5 பில்லியன் டாலர் (₹35,000 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.