பாஜ.வுக்கு எதிராக வியூகம்... டெல்லியில் 27ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம்

புதுடெல்லி: டெல்லியில் வருகிற 27ம் தேதி பாஜ.வுக்கு எதிரான எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. வருகிற மக்களவை தேரதலில் பாஜ.வுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றவாது அணியை அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரவமாக ஈடுபட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கொல்கத்தாவில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட  பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இதேபோல், கடந்த 13ம் தேதி டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களவை தேர்தலுக்கான செயல் திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற 27ம் தேதி டெல்லியில் தேர்தலில் பாஜவை எதிர்கொள்வது குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜ.விற்கு எதிரான வியூகங்கள், செயல்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: