விமான நிறுவனங்களை போல் தொடர் பயணத்துக்கு பிஎன்ஆர்: ரயில் தாமதமானால் முழு கட்டணம் வாபஸ்

புதுடெல்லி: விமான நிறுவனங்களை போல், பயணிகளின் தொடர் பயணத்துக்கான பிஎன்ஆர் எண்களை ரயில்வே வழங்கவுள்ளது. தொடர் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு விமான நிறுவனங்கள், இணைப்பு விமானங்களுக்கான பிஎன்ஆர் எண்களை வழங்குகின்றன. அதேபோல், பல ரயில்கள் மூலம் தொடர் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இணைப்பு பிஎன்ஆர் எண்களை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.  இதன் மூலம், ஒரு பயணி பயணம் செய்யும் ரயில் தாமதமாக சென்று, அதன் மூலம் இணைப்பு ரயிலை பயணி தவறவிட்டால், பயணம் செய்யாத தூரத்துக்கான கட்டணம் எந்த பிடித்தமும் இல்லாமல் பயணிக்கு திருப்பி செலுத்தப்படும். இதற்கு அந்த பயணி முதல் ரயில் வந்தடைந்த நேரத்திலிருந்து 3 மணி நேரத்துக்குள், ரயில் டிக்கெட்டை ஒப்படைக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும், இ-டிக்கெட், கவுன்டர் டிக்கெட் என எல்லாவற்றுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். இதன் மூலம் இணைப்பு ரயிலை தவறவிட்டால், முழுப் பயணத்துக்கான தொகையையும் இழக்க வேண்டிய நிலை பயணிக்கு ஏற்படாது. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: