வாசுதேவநல்லூர் அருகே கண்ணீர் வடிக்கும் மாதா சிலை : பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்

சிவகிரி : வாசுதேவநல்லூர் அருகே மாதா சிலையின் முகத்தில் இருந்து தண்ணீர் போன்ற திரவம் சுரப்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பொதுமக்கள் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு பிரசித்தி பெற்ற குருசுமலை மாதா ஆலயம் உள்ளது. 75 ஆண்டுக்கு முன் இந்த மலையில் மாதா காட்சி கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டது. தற்போது அதன் பவள விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதையொட்டி டிச. 29ம்தேதி மெக்சிகோ நாட்டில் குவாபலூபே இடத்தில் உள்ள மரிய அன்னையின் புனித அங்கி இங்கு கொண்டுவரப்பட்டு அதை பக்தர்களுக்கு போர்த்தி ஆசி வழங்கினர்.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மாதாவின் முகத்தில் இருந்து தண்ணீர் போன்ற திரவம் வடியத்தொடங்கியது. இதை பார்த்தவர்கள் மாதாவின் முகத்தை துணியால் துடைத்துவிட்டனர். ஆனால் அந்த திரவம் வடிவது நிற்கவில்லை. தொடர்ந்து வந்து கொண்டு இருந்ததால், அது கீழே விழாமல் இருக்க சில்வர் கிண்ணம் ஒன்றை மாதாவின் கழுத்து பாகத்தில் வைத்தனர். மாதா முகத்தில் திரவம் வடியும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்றிரவு முதல் இன்று வரை சுற்றுப்பட்டியைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். சிலர் அந்த திரவத்தை எடுத்து உடலில் பூசிக்கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: